மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

கரூர்: தூய பால் உற்பத்திக்குப் பயிற்சி!

கரூர்: தூய பால் உற்பத்திக்குப் பயிற்சி!

கரூர் மாவட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக நவம்பர் 22ஆம் தேதி தூய பால் உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து கரூர் மாவட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வருகிற நவம்பர் 22ஆம் தேதி தூய பால் உற்பத்தி முறைகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. தினசரி பால் கறப்பதின் அவசியம், பால் கறக்கும் முறை, தூய முறையில் பால் கறக்கும் முறை, பால் உற்பத்தியை அதிகரிக்கும் முறை, பால் அதிகரிக்கக் கொடுக்க வேண்டிய தீவனம் போன்றவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல காஞ்சிபுரத்தில் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் கெண்டை மீன் வளர்ப்பு குறித்த இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கெண்டை மீன் வளர்ப்பு முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. கெண்டை மீன் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு, வளர்ப்புக்கு ஏற்ற இடம் தேர்வு செய்தல், மீன் குளம் அமைத்தல், மீன் குஞ்சுகளை இருப்பு செய்தல், மீன் வளர்ப்பில் தீவனம், நீர் தரம் மற்றும் நோய் மேலாண்மை, பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்த வகுப்புகள் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்குச் செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது