மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

வீடு கட்டுவதற்கான விதி மாற்றம்!

வீடு கட்டுவதற்கான விதி மாற்றம்!

சென்னையில் வீடு கட்ட அனுமதிக்கப்படும் எஃப்எஸ்ஐ எனப்படும் தளப் பரப்பளவு குறியீடு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நேற்று (நவம்பர் 7) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் வீடு மற்றும் அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கு, தளப் பரப்பளவு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சிறப்புக் கட்டடங்கள் எனப்படும் நான்கு மாடிகளுக்கு மிகாத கட்டடங்களுக்கு, தளப் பரப்பளவு 1.5 மடங்காக இருந்தது. இதனால், 1,000 சதுர அடி நிலத்தில் 1,500 சதுர அடி பரப்புக்கு மிகாமல் மட்டுமே கட்டடத்தைக் கட்ட முடியும்.

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், அனைவருக்கும் இலவசமாக அனுமதிக்கப்படும் தளப் பரப்பளவு குறியீடானது 1.5இல் இருந்து 2 ஆக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்த அரசாணை, நேற்று தமிழக அரசினால் வெளியிடப்பட்டது. “1,000 சதுரடி நிலம் வைத்திருப்பவர்கள் 1,500 சதுர அடிக்குக் கட்டடம் கட்டிக்கொள்ளலாம் என்ற அனுமதியானது, தற்போது 2,000 சதுர அடி வரை மாற்றப்பட்டுள்ளது” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon