பாகிஸ்தான் பிரதமருக்கு நீதிமன்றம் சம்மன்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் ஆஜராக வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் போட்டியிட மனு தாக்கல் செய்த இம்ரான் கான் தனது குடும்பத்தினரின் விவரங்களைத் தெரிவித்திருந்தார். அதில், அமெரிக்காவைச் சேர்ந்த சீதா வைட் மூலம் தனக்குப் பிறந்த மகளான தைரன் வைட் பெயரைக் குறிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இனாமுல்லா கான் என்பவர் பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசியலமைப்பின் 62 மற்றும் 63ஆவது சட்டத்தின் கீழ் வரும் அளவுகோல்களை இம்ரான் கான் நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தைரன் வைட்டின் தந்தை இம்ரான் கான்தான் என லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் கூறியதையும் தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.