மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

உள்ளதைச் சொல்லும் ஊடுகதிர்கள்!

உள்ளதைச் சொல்லும் ஊடுகதிர்கள்!

தினப் பெட்டகம் – 10 (8.11.2018)

இன்று சர்வதேசக் கதிரியக்க நாள் (International day of Radiology)

1. ஆண்டுதோறும் நவம்பர் 8ஆம் தேதி சர்வதேசக் கதிரியக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2. கதிரியக்கத்தைக் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

3. மருத்துவத் துறையில் இன்றியமையாத இடம் கதிரியக்கத்திற்கு உள்ளது.

4. 1895ஆம் ஆண்டு, Wilhelm Conrad Röntgen என்பவர் முதன்முறையாக எக்ஸ்ரே கண்டுபிடித்த தினத்தைத்தான் சர்வதேசக் கதிரியக்க நாளாகக் கொண்டாடுகிறோம்.

5. இந்நாளின் முக்கியமான தலைப்பாக, Cardiac imaging கருதப்படுகிறது. காரணம், நம் இதயத்தில் எந்தப் பிரச்சினை என்றாலும், அவற்றைக் கண்டுபிடிக்க உதவுவது கதிரியக்கம்தான்.

6. European Society of Radiology (ESR), the Radiological Society of North America (RSNA), the American College of Radiology (ACR) மற்றும் பல சிறிய பெரிய அமைப்புகள் இணைந்து இந்நாளைக் கொண்டாடுகின்றன.

7. இந்த அமைப்புகளில் நேரடியாகவோ அல்லது அந்த ஊர்களில் அவர்கள் அமைப்பிலோ, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

8. எக்ஸ்ரேக்களின் ஒரு வகையை வைத்துத்தான், நம் DNAவின் வடிவத்தைக் கண்டுபிடித்தார்கள்.

9. பொதுமக்களுக்குக் கதிரியக்கம் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. நம் ஆரோக்கியத்திலும், நோய்கள் ஏற்படுமாயின் குணப்படுத்துவதிலும், கதிரியக்கங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன.

10. ஒவ்வொரு தேசிய கதிரியக்க அமைப்புகளிலும், கதிரியக்கத் துறையைச் சார்ந்தவர்கள் பங்கெடுத்து, கருத்தரங்கங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடக்கும்.

- ஆஸிஃபா

வியாழன், 8 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon