மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

 மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

விளம்பரம்

படித்தவர்களாக இருந்தாலும், பாமரர்களாக இருந்தாலும், மனநலத்திற்கான சிகிச்சை என்பதே வேப்பங்காயாகக் கசக்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் என்று பொது மருத்துவர்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கும் பலருக்கு, மனநல மருத்துவம் என்றாலே பயம் தொற்றிக்கொள்கிறது. அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதனால் சுயஅடையாளம் பறிபோய்விடுமோ என்று பதறுகின்றனர். முக்கியமாக, உறவினர்களும் நண்பர்களும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் என்ன நினைப்பார்களோ என்று சிந்திக்கின்றனர். இதன் விளைவு, மனநலம் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளை யார் மேற்கொண்டாலும், அதனைக் கிண்டலாக நோக்கும் பார்வை பெருகுகிறது. பழமையைப் போர்த்திக்கொண்டு அனைத்தையும் விமர்சிக்கும் போக்கு பரவலாகிறது.

யாராவது மனநல மருத்துவமனைக்குச் சென்று வந்தாலே, ‘பைத்தியம்’ என்ற அடைமொழியுடன் அழைப்பதை மற்றவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். எல்லாவற்றிலும் முன்னேற்றம் குறித்துச் சிந்திக்கும் நம்மில் பலர், மனநல மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் பிற்போக்குத்தனமாகவே இருக்கின்றனர்.

பொது மருத்துவரைச் சந்தித்தால், நமக்கு குணமாகவே முடியாத அரிய நோய்கள் இருப்பதாக எவரும் யோசிப்பதில்லை. உடல் கோளாறுகளை வகைபிரிக்கத் தெரிந்த நமக்கு, மனதின் பிரச்சினைகள் மட்டும் ஏன் ஒரு மோசமான வடிவமாகவே தெரிய வேண்டும்? மனநல சிகிச்சைகளின்போது தரப்படும் மருந்துகள், நமது வாழ்க்கையின் இயல்பையே புரட்டிப்போடும் என்ற எண்ணமும் இதன் பின்னால் இருக்கிறது.

எல்லா மனநலப் பிரச்சினைகளுக்கும் மாத்திரை அவசியமில்லை என்பதைப் புரிந்துகொண்டால், மனநல மருத்துவம் பற்றிய சிந்தனையில் மாற்றம் வரும். மருந்தில்லா மருத்துவமாகவே மனநல சிகிச்சைகள் அணுகப்பட வேண்டும். மிகவும் அரிதாகவே, மருந்துகள் மனநல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இதற்கு மாறாகச் சில விளம்பரங்கள் நமது கவனத்தைக் கலைக்கக்கூடும். அதனைப் புறந்தள்ளிவிட்டு நமக்கான தீர்வை நோக்கி செல்ல வேண்டும்.

மனநலக் கோளாறுகளுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தக்க வழிகாட்டுதலையும் விடப் பெரிய சிகிச்சை வேறில்லை. இதனை மீறி மனநல சிகிச்சையில் மாத்திரைகள் முன்னெடுக்கப்படுவது தவறான முன்னுதாரணம் தான்.

மைண்ட் ஸோன் மருத்துவமனை மனநல சிகிச்சை பற்றிய தவறான புரிதல்களைக் களைவதோடு, உங்களை நல்வழிப்படுத்தும் பல ஆலோசனைகளையும் வழங்குகிறது. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன்
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: [email protected]
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon