மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

எனக்கும் காய்ச்சல் அடிக்கிறது மன்னா: அப்டேட் குமாரு

எனக்கும் காய்ச்சல் அடிக்கிறது மன்னா: அப்டேட் குமாரு

இன்னும்மா அந்த பலகாரம் எல்லாம் ஊசிப்போகாம இருக்கு. போட்டோவை மட்டும் புதுசு புதுசா போட்டுகிட்டே இருக்காங்க. இதுலாம் வீட்டுல பண்ணியிருப்பாங்களா கடையில வாங்கியிருப்பாங்களா அப்படின்னுல்லாம் எனக்கு டவுட் இல்லை. எந்த வெப்சைடுல டவுண்லோடு பண்ணியிருப்பாங்கன்னு தான் யோசிக்கிறேன். டிஜிட்டல் இந்தியாவுல மக்களும் டெவலப் ஆகிட்டாங்க. இதை நான் ஏன் உறுதியா சொல்றேன்னா ஒவ்வொருத்தரும் பதினெட்டு வகையான டிஷ் சாப்பிட்டதா ஃபேஸ்புக்ல கணக்கு சொல்றாங்க. சரி எல்லாம் இன்னையோட முடிஞ்சுடும். நாளைக்கு காலையில ஆபிஸுக்கும் ஸ்கூலுக்கும் கிளம்பும் போது தான் தெரியும். பலருக்கு இப்பவே காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சிருக்கும். சாயங்காலத்துல இருந்து நாலு பேரு என் இன்பாக்ஸ்ல வந்து பருவ மழை புயலாக மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கான்னு கேட்டுகிட்டு இருக்காங்க. அப்டேட்டை பாருங்க

@Kozhiyaar

எதிர்காலத்திற்கு சேமிக்கும் பழக்கத்தை பட்டாசை அடுத்த ஆண்டிற்கு சேமித்து வைப்பதில் இருந்தே துவங்குகின்றனர் குழந்தைகள்!!!

@ShivaP_Offl

மனைவிகிட்ட மானங்கெட்ட திட்டுவாங்கி இழந்த மரியாதையை,

கஸ்டமர் கேருக்கு போன்பன்னி பத்துநிமிஷமாவது பேசினால்தான் தெம்பு கிடைக்குது...

@mufthimohamed1

“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி

எதுக்கு உங்கள நாடு சுத்தி காட்டுனதுக்கா. ?

@Suyanalavaathi

சர்கார் காட்சி விவகாரம் : வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜூ#

சினிமாவ சினிமாவா பாக்க தமிழிசை அக்கா கிட்ட இருந்து கத்துக்கோங்க சார் !!

@rahimgazali

சர்கார் படத்தில் அரசின் இலவச பொருள்களை எரிப்பது போன்ற காட்சிகளை அவர்களாவே நீக்கினால் நல்லது. இல்லையேல் நீக்க நடவடிக்கை எடுப்போம் - கடம்பூர் ராஜூ

படத்தின் வில்லி கேரக்டருக்கு கோமலவள்ளி என்று பேர் வைத்ததுக்காகத்தான் நீங்க பொங்குவீங்கன்னு நினைச்சேன். அப்ப நீங்க அதுக்கு பொங்கலையா?!

@yugarajesh2

வருசம், வருசம் தன்னுடைய சாதனையை தானே முறியடிக்கிறது

விராட் கோலியும், டாஸ்மாக் மட்டும் தான்.

@mufthimohamed1

படத்தில் மட்டுமே 'சர்கார்' அமைக்க முடியும்; முதலமைச்சராக முடியும்: தமிழிசை சவுந்தர்ராஜன் #

அப்ப நீங்களும் ஒரு படம் எடுத்து முதலமைச்சராகி ஆசைய தீர்த்துக்குட்டாதான் உண்டு

@yaar_ni

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடத்த 3 நாட்களாக மது சுமார் ரூ.330 கோடிக்கு விற்பனை; கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.70கோடிக்கு மது அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்!

330 கோடி பத்தாதே டா ..

@Kozhiyaar

கூட்டமாய் சென்று ஐஸ் கிரீம் சொன்னா, முதலில் நமக்கு வந்தால் அதை நம்மால் முழுதாக உண்ண முடிவதில்லை!!!

@rahimgazali

ட்வீட்டர், ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் சிலர் தமிழ் ராக்கர்ஸ் போலத்தான். நம்ம பதிவு போட்ட அடுத்த நிமிடமே அதை காப்பி பேஸ்ட் செய்து போட்டடுறாங்க.

@Thaadikkaran

ப்ளூ சட்டைக்காரர் பாலா படத்துல நடிச்சார்னா யாரு சந்தோசப்படுறாங்களோ இல்லயோ உச்ச நடிகர்களின் ரசிகர்கள் சந்தோஷத்திற்கு அளவில்லாமல் போய்விடும்..!!

@rahimgazali

முதல் நாள் வசூலில் பல சாதனைகளை உடைத்து முதல் இடத்தை பிடித்தது சர்கார்!

அங்கே என்னப்பா சத்தம்? - டாஸ்மாக்.

@Thaadikkaran

தியேட்டர்க்கு படம் பார்க்க வந்திட்டு,என்ன இந்த பக்கம்னு கேக்குறானுங்க.உலகமே அழிஞ்சாலும் இந்த கேள்வியை மட்டும் மாத்தவே மாட்டானுங்க போல..!!

@Yasar_Tweet

உடல்நிலை சரியில்லாத போதும், டெல்லியில் கடும் வெயிலில்,கடினமான உழைப்பை வெளிப்படுத்தி நடித்துக் கொடுத்தவர் ரஜினி- ஷங்கர்.

வயல்ல வேலை செய்யுற விவசாயி ரேஞ்சுக்கு பீல் பன்றீங்களே சார்

@gips_twitz

சர்கார் சர்ச்சை காட்சிகள்: நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல - அமைச்சர் கடம்பூர் ராஜூ

இப்ப அந்த படத்துக்கு நீங்க விளம்பரம் பண்ணுறது உங்க கட்சிக்கு நல்லதில்ல ..

@yugarajesh2

கள்ள கதை கருவை வைத்து கள்ள ஓட்டுக்கு எதிராக படம்- தமிழிசை#பிஜேபிக்கு எதிராக தானே நாங்க ஓட்டு போட்டோம் ஆனா நீங்க கள்ளத்தனமா பின்னாடி இருந்து ஆட்சி செய்யலையா அப்படி தான்..!!

@senthilcp

பேட்டியில் பதில் தெரியவில்லை எனில் கமல் மக்களைப் பார்த்து கை காட்டுகிறார்; ரஜினி மேலே பார்த்துக் கை காட்டுகிறார்.இதுல இருந்து என்ன தெரியுது?

ஆண்டவன் மேல பழியைப்போடறது"ஈசி,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புனு டபாய்க்கறது கஷ்டம்

@manipmp

தீபாவளியையொட்டி கடந்த 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக்கில் ரூ.730 கோடிக்கு மது விற்றதாக தகவல்.

குடி உயர கோன் உயரும்

@Subbumeil

பண்டிகை விடுமுறை முடிந்து அடுத்த நாள் ஆபிஸ்க்கு செல்வது ஆயிரம் திங்கட் கிழமைகளுக்கு சமம்!

@HAJAMYDEENNKS

பண்டிகை காலங்களில் அம்மாவை விட டிவி ரிமோட்டே அதிகமாக உழைக்கிறது !

@rahimgazali

அட்லி, முருகதாஸெல்லாம் கொடுத்து வைத்தவங்க. விஜயை வைத்து படம் இயக்கும்போது அரசு சார்பில் இலவச விளம்பரம் கிடைத்துவிடுகிறது.

-லாக் ஆஃப்

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon