மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

சென்னை: 40 டன் குப்பைகள் அகற்றம்!

சென்னை: 40 டன் குப்பைகள் அகற்றம்!

தீபாவளிப் பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (நவம்பர் 6) தீபாவளி பண்டிகையைப் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர் மக்கள். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதால், கடந்த சில ஆண்டுகளில் இருந்த அளவுக்குத் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர் பொதுமக்களில் சிலர்.

தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் நிரம்பிக் கிடந்தன. நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 40 டன் பட்டாசுக் குப்பைகள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றைக் கும்மிடிப்பூண்டியில் உள்ள குப்பை கையாளும் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளை அகற்றும் பணியில் சுமார் 19,000 பணியாளர்கள் ஈடுபட்டதாகக் கூறியுள்ளனர்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon