மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

இந்தியா மீது வர்த்தக அமைப்பு குற்றச்சாட்டு!

இந்தியா மீது வர்த்தக அமைப்பு குற்றச்சாட்டு!

விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்தியா இரும்பு மற்றும் எஃகு பொருட்களுக்கு வரி விதித்ததாக உலக வர்த்தக சங்கம் (டபள்யூ.டி.ஓ.) கூறியுள்ளது.

2015ஆம் ஆண்டில் இரும்பு மற்றும் எஃகு பொருட்களுக்கு 20 விழுக்காடு கூடுதல் பாதுகாப்பு வரியை இந்தியா விதித்தது. அதிகப்படியான வெளிநாட்டு இறக்குமதிகளால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்த வரிவிதிப்பை ஒன்றிய அரசு விதித்தது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தோடு இந்த வரிவிதிப்பு காலாவதியாகிவிட்டது. ஆனால் இந்த வரிவிதிப்பு தொடர்பாக 2017ஆம் ஆண்டில் உலக வர்த்தக சங்கத்தில் ஜப்பான் புகார் அளித்திருந்தது. கட்டணம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் 1994-ஐ மீறி இந்தியா இரும்பு மற்றும் எஃகு பொருட்களுக்கு பாதுகாப்பு வரி விதித்ததாக ஜப்பான் குற்றம்சாட்டியது.

இந்தப் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட இருதரப்பு கமிட்டியால் தீர்வை எட்ட இயலவில்லை. இதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரிக்க உலக வர்த்தக சங்கம் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் விசாரணையின் அடிப்படையில் இந்தியா சர்வதேச விதிமுறைகளை மீறி வரிதிப்பை மேற்கொண்டதாக தற்போது கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டிடமிருந்து எஃகு பொருட்கள் இறக்குமதியை எளிமையாக்க 2011ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 11 பில்லியன் டாலராக உள்ளது. இது ஜப்பானுக்குத்தான் பெரிதும் சாதகமாக உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை 11 பில்லியன் டாலராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon