மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள சர்கார் திரைப்படம் நடப்பு அரசியல் நிகழ்வுகளை மையமாகக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதை தம்முடையது என வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தது முதல் சர்கார் சர்ச்சை தொடர்கிறது.

இந்த நிலையில் சர்கார் திரைப்படத்தில் கோமளவல்லி என்கிற பெயரில் வில்லி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது அடுத்த சர்ச்சையானது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கிறது என கூறப்பட்டிருந்தது.

தற்போது சர்கார் திரைப்படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, “சர்காரில் படத்தில் சில காட்சிகள் தொடர்பாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளை அவர்களாகவே நீக்க வேண்டும். இது நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon