மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

தீ விபத்து: 232 அழைப்புகள்!

தீ விபத்து: 232 அழைப்புகள்!

தீபாவளியன்று தமிழகம் முழுவதும் நடந்த தீ விபத்துகள் தொடர்பாக, தீயணைப்புத் துறைக்கு 232 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

தமிழகம் முழுவதும் நேற்று (நவம்பர் 6) தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிக்கும்போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால், கடந்த சில ஆண்டுகளில் தீபாவளியின்போது தீ விபத்துகள் ஏற்படுவது தொடர்கிறது. இதனைத் தடுப்பதற்கான பணிகளைத் தமிழகத் தீயணைப்புத் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் தீ விபத்து தொடர்பாக 232 அழைப்புகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர் தீயணைப்புத் துறையினர். இதில் 228 அழைப்புகள் சிறு விபத்துகள் தொடர்பானவை. 4 மட்டும் சற்றே தீவிரமான தீ விபத்துகள் என்று தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் அதிக அளவில் தீ விபத்து தொடர்பான அழைப்புகள் வந்துள்ளன. மொத்தம் 57 அழைப்புகள் வந்ததாகவும், இவற்றில் ஒரு அழைப்பைத் தவிர மற்றனைத்தும் சிறு விபத்துகள் தொடர்பானவை என்றும் கூறப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 11 அழைப்புகள் வந்தன என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீபாவளியன்று ஏற்பட்ட தீக்காயம் காரணமாக 23 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார் அம்மருத்துவமனையின் டீஜ் வசந்தா மணி. 16 பேருக்குச் சிறு அளவிலான காயம் என்றும், 7 பேருக்குத் தீவிரமான தீக்காயம் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon