மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

ராஜேந்திர சோழனாய் மாறும் விக்ரம்

ராஜேந்திர சோழனாய் மாறும் விக்ரம்

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்துவரும் விக்ரம் வித்தியாசமான கெட் அப்பில் தோன்றியுள்ள புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் சென்னையில் தொடங்கி நடைபெற்றது. படத்தில் அக்‌ஷரா ஹாசன், அபி மெக்தி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். தற்போது படக்குழு மலேசியா சென்று படப்பிடிப்பைத் தொடர்கிறது. மலேசியாவை கதைக்களமாகக் கொண்டே திரைக்கதை உருவாகியுள்ளது. மலேசியாவில் உள் அரங்குகளில் எடுக்கக்கூடிய காட்சிகளின் படப்பிடிப்பே சென்னையில் அரங்கு அமைத்து படமாக்கப்பட்டது. தற்போது மலேசியாவின் வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல் நேற்று (நவம்பர் 6) வெளியிட்டுள்ளார். படத்திற்குக் கடாரம் கொண்டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மலேசிய தீபகர்ப்பத்தின் ஒரு பகுதியை வென்ற ராஜேந்திர சோழனுக்குக் கடாரம் கொண்டான் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மலேசியாவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம் என்ன மாதிரியான கதையைக் கொண்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கையில் விலங்குடன் உடல் முழுவதும் பச்சை குத்திய நிலையில் உள்ள விக்ரமின் புகைப்படம் கவனம் பெற்றுவருகிறது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் காட்சியளிக்கும் விக்ரமின் தோற்றம் அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon