மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

தீபாவளி: ரூ 330 கோடி மது விற்பனை!

தீபாவளி: ரூ 330 கோடி மது விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.330 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாளன்றும், தீபாவளி அன்றும் மது விற்பனை அதிகளவில் நடைபெறும். இதன்படி, இந்தாண்டு தீபாவளிக்கு 350 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் ரூ.330 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.70 கோடி அதிகம்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.260 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. 2016ஆம் ஆண்டு தீபாவளியின்போது ரூ.245 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

கோவை டாஸ்மாக் வடக்கு மண்டலத்தில் மட்டும், நேற்று ஒரே நாளில் 6.85 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. நாமக்கலில் ரூ.5.38 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது மோதலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் மது போதையில் இருந்த காரணத்தினால் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon