மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

ஆலியா பட்டின் தீபாவளி ஸ்பெஷல்!

ஆலியா பட்டின் தீபாவளி ஸ்பெஷல்!

திரை ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நாயகன், நாயகிகள் நடித்த படங்களைப் பார்த்து பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் திரை பிரபலங்கள் பண்டிகைகளை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையைத் தான் எப்படி கொண்டாடுவேன் என பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆலியா பட் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தனது பண்டிகை கொண்டாட்டம் குறித்து பேசியுள்ளார். “தீபாவளி அன்று காலையில் கரன் ஜோஹரின் அலுவலகத்தில் பூஜையில் கலந்து கொள்வேன். அது தான் நான் செல்லும் முதல் இடம். அதன்பின் ஜிம்க்கு சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்வேன். எனது பூனைகளோடு நேரம் செலவிடுவேன். அதன் பின் தீபாவளி பார்ட்டி அல்லது பிற கொண்டாட்டங்களில் இரவில் கலந்துகொள்வேன். தீபாவளியைப் பொறுத்தவரை குடுபத்தினர், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். பணிபுரியும் இடங்களைவிட்டு அனைவரும் வெளியே வந்து கொண்டாடுவது இந்த பண்டிகையின் சிறப்பம்சம். மற்ற நேரங்களில் இவர்களை அடிக்கடி பார்க்கமுடிவதில்லை” என்று கூறினார்.

தீபாவளிக்கு பரிசுகளை பரிமாறிக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் தீபாவளிக்காக அதிக பரிசுகளைப் பெறும் நபராக இருக்கிறேன். இந்த முறை நானும் மற்றவர்களுக்குப் பரிசு கொடுக்க உள்ளேன்; அதுவும் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே பரிசு கொடுப்பேன். ஏனென்றால் இந்த பண்டிகையால் அவை தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பரிசுப் பொருள்கள், பலகாரம் என நாம் கொண்டாடுகிறோம். எனவே அவற்றுக்கான பரிசுகள், உணவுகள், விளையாட்டு பொருள்கள் ஆகியவற்றை அளிக்கவுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon