மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

18 வாகனங்களை எரித்த ‘குடி’மகன்!

18 வாகனங்களை எரித்த ‘குடி’மகன்!

டெல்லியிலுள்ள மாதங்கிர் என்ற இடத்தில், மது போதையில் 18 வாகனங்களுக்குத் தீ வைத்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களின் எரிபொருள் குழாயைத் திறந்து ஒரு நபர் தீ வைத்த வீடியோவொன்று, நேற்று (நவம்பர் 6) சமூக வலைதளங்களில் வைரலானது. டெல்லியின் தெற்குப்பகுதியான மாதங்கிர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று காலை 3 மணியளவில் இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், சில வாகனங்கள் முழுமையாக எரிந்துபோயின. போலீசார் செல்வதற்குள், வாகனங்களுக்குத் தீ வைத்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

இதில் 14 மோட்டார் சைக்கிள்களும் 4 கார்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. பெட்ரோல் நிறைந்து வழிந்ததால், 6 மோட்டார் சைக்கிள்களுக்கு வைத்த தீ பரவி அருகிலிருந்த கார்களையும் பற்றியுள்ளது.

அப்பகுதி சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில், வாகனங்களுக்குத் தீ வைத்த நபர் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞன் என்று தெரிய வந்துள்ளது. இவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைத் தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon