மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

பன்முகக் கலைஞனின் பிறந்த நாள்!

பன்முகக் கலைஞனின் பிறந்த நாள்!

தினப் பெட்டகம் – 10 (7.11.2018)

தன் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது, அதற்குப் பதில் சமூக சேவைகள் செய்யுங்கள் என்று சொல்லும் கமல்ஹாசனின் பிறந்தநாளை (நவம்பர் 7) ஒட்டி அவரைப் பற்றிய 10 தகவல்கள்.

1. கமல்ஹாசன் நடிகராக அறிமுகமான படம், ‘களத்தூர் கண்ணம்மா’. அப்போது அவர் வயது 4.

2. இயக்குனர் கே. பாலச்சந்தருடன் இணைந்து ஏறத்தாழ 35 படங்களில் பணியாற்றியிருக்கிறார்,.

3. 60 ஆண்டுகளாக சினிமாத் துறையில், ஈடில்லாத் திறமையை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார், நம்மவர்!

4. ‘தேவர் மகன்’ படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார். மேலும், இப்படம் 1992ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

5. தன் ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் நற்பணி இயக்கமாக மாற்றினார் கமல். தமிழகத்தில் ஒரு நடிகர் அப்படிச் செய்வது இதுதான் முதல் முறை.

6. ஆறு மொழிகளில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமை இவரையே சேரும்- இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்கம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார்.

7. இதுவரை கமல்ஹாசனுக்கு 4 தேசிய விருதுகள், 19 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 9 மாநில விருதுகள், 8 விஜய் அவார்ட்ஸ், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் செவாலியே ஆகிய விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

8. சிவாஜி கணேசனுக்குப் பிறகு, கமல் ஹாசனுக்குத்தான், ஃபிரான்சு நாட்டின் Chevalier of the Ordre des Arts et des Lettres என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது.

9. மாறுபட்ட பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் தனி ஆர்வமும் திறமையும் கொண்டவர். ‘அவ்வை ஷண்முகி’ முதல் தசாவதாரம் வரை இவர் சோதித்துப் பார்த்திராத வேடங்களே இல்லை.

10. ஃபிலிம்ஃபேர் விருதுகளில், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகர், ஆகிய இரு விருதுகளையும் ஒரே நபர் பெறுவது, ‘சாகர்’ என்ற படத்தில் கமல் நடித்த இரு வேடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.

- ஆஸிஃபா

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon