மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 27 பிப் 2020

காஞ்சிபுரத்தில் பூச்சி மேலாண்மை வகுப்பு!

காஞ்சிபுரத்தில் பூச்சி மேலாண்மை வகுப்பு!

காஞ்சிபுரத்தில் பயிர்களில் நன்மை தரும் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் சார்பாக ஒவ்வொரு மாதமும் பல்வேறு சாகுபடி, கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதியன்று பயிர்களில் நன்மை தரும் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். சாகுபடி செய்யும் பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கும் முறை, நன்மை செய்யும் பூச்சிகள் மூலம் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் முறை, நன்மை செய்யும் பூச்சிகளைக் கவரும் முறை போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் இந்த வகுப்பு நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய 04427 452371 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon