மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

டெங்கு: ரயில் நிலையத்துக்கு அபராதம்!

டெங்கு: ரயில் நிலையத்துக்கு அபராதம்!

காஞ்சிபுரத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று இருந்த பழைய ரயில் நிலையத்திற்கு ரூ.20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார் அம்மாவட்ட ஆட்சியர்.

தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழலைச் சுகாதாரமற்ற நிலையில் வைத்திருக்கிற நிறுவனங்கள், நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று (நவம்பர் 7) திடீரென அங்குள்ள பழைய ரயில் நிலையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற சூழல் நிலவியதால், ரயில் நிலைய நிர்வாகத்திற்கு 20,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார் அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon