மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

தமிழர் விடுதலை: சிறிசேனா மீது ரணில் குற்றச்சாட்டு!

தமிழர் விடுதலை: சிறிசேனா மீது ரணில் குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அதிபர் சிறிசேனா முட்டுக்கட்டையாக இருந்தார் என ரனில் விக்கிரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்மிர்ரர் இணையதளத்துக்கு ரணில் விக்கிரமசிங்கே அளித்த பேட்டியில், “இலங்கை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஒவ்வொரு கட்டமாக விடுதலை செய்வது என முடிவு எடுத்திருந்தோம். இதில் எனக்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் மைத்திரிபால சிறிசேனாவுக்கு சில அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் விருப்பம் இல்லை.

இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்பு தம்மை கொலை செய்ய சதி செய்வதாக மைத்திரிபால சிறிசேனா கூறியிருந்தார். ஆனால் அவசரம் அவசரமாக இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து மைத்திரிபால சிறிசேனா விளக்கம் அளித்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேனா விளக்கம் அளித்ததில் இருந்தே அவரது குற்றச்சாட்டின் உண்மை தன்மை தெரிய வரும்.

நான் பிரதமர் பதவியில் இருப்பதை மைத்திரிபால சிறிசேனா விரும்பவில்லை. இதை அவர் என்னிடம் நேரடியாக தெரிவித்திருக்கலாம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை. ஆனால் பிற கட்சிகள் இதை நிராகரிக்கவே செய்கின்றன.

இருப்பினும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் நாட்டை பாதிக்காத வகையில் இந்த அதிகாரப்பகிர்வு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon