மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 6 டிச 2019

நந்திதா: டோலிவுட்டில் சரியாத மார்கெட்!

நந்திதா: டோலிவுட்டில் சரியாத மார்கெட்!

கர்நாடகாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கன்னடத் திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் நந்திதா ஸ்வேதா தமிழ், தெலுங்கு திரையுலகிலே அதிகளவில் நடிக்கிறார்.

அசுரவதம் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த நிலையில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் தயாராகிவருகின்றன. செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் உருவான பின்னரும் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வராமல் கிடப்பில் உள்ளது. வணங்கா முடி, தேவி 2 ஆகிய படங்களும் கைவசம் உள்ளன. வைபவ்க்கு ஜோடியாக முழு நீள காமெடி ஜானரில் நடித்துள்ள டானா திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழில் இப்படி என்றால் தெலுங்கில் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நந்திதா. ‘எக்கடிகி பொதவு சின்னாவடா’, ‘ஸ்ரீனிவாசா கல்யாணம்’ ஆகிய படங்களில் நடித்த நந்திதாவுக்கு தெலுங்கு திரையுலகில் வரவேற்பு உருவாகியது. தற்போது சின்னி கிருஷ்ணா இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் இணைந்துள்ளார்.

அகி தேஜா பெல்லம்கொண்டா, சுரேஷ் வர்மா அல்லுரி இணைந்து தயாரிக்கின்றனர். சுரேஷ் பாப்லி இசையமைக்கிறார். நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon