மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

மீண்டும் இனவாதத்தை கூர் தீட்டும் ராஜபக்சே

 மீண்டும் இனவாதத்தை கூர் தீட்டும் ராஜபக்சே

இலங்கை அரசியலில் ஒவ்வொரு நாளும் மலினமான திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. குதிரைபேரத்தின் தலைநகராக கொழும்பு மாறிக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த அரசியல் அமைப்பும் இந்த விமர்சனங்களுக்கு தப்பவில்லை.

எதிர்வரும் 14.11.18 அன்று, இலங்கை நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில் 225 உறுப்பினர் கொண்ட அவையில், ராஜபக்சேவின் பலம் 104 ஆக உயர்ந்துள்ளது. ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சி 105 இருந்து பலம் 97 ஆக குறைந்துள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 பேர் ஆதரவு அவர்களுக்கு தரப்பட உள்ளது. மொத்தம் 112.

ராஜபக்சே நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாலும் வெல்லாவிட்டாலும் கூடிய விரைவிலேயே நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தும் படி அதிபர் சிறிசேனா பரிந்துரைக்கப் போகிறார் என்றும் அந்தத் தேர்தலில் சிங்கள இன வாதத்தை ஒருங்கிணைத்து மீண்டும் வெற்றிபெற ராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார் என்றும் கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எழுத்துபூர்வமான உத்திரவாதம் அளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கிறது. அதை ரனில் நிச்சயம் நிறைவேற்ற உறுதி அளிப்பார். அதனால் அவருக்கு பெரும்பான்மையான சிங்கள ஆதரவு பெருமளவில் குறைந்துவிடும். மேலும் ரனில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்கும் பட்சத்தில் அதிபர் சி/றிசேனா , அதிகபட்சம் ஆறு மாதத்தில் ஆட்சியை கலைத்து விடுவார்.

அதன்பின் தேர்தல் நடந்தாலும் ராஜபக்சே, சிங்கள பெரும்பான்மை இனவாதத்துக்கு தான் ஆதரவாகவும் ரனில் தமிழர்களுக்கு ஆதரவானவர் என்ற பிம்பத்தையும் ஏற்படுத்தித் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம்.

பிரதமர் பதவிஏற்றபின் ராஜபக்சே விடுத்த அறிக்கையில், விரைவில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே கவனிக்கத் தக்கது.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon