மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

தீபாவளி: தங்கம் விற்பனை உயர்வு!

தீபாவளி: தங்கம் விற்பனை உயர்வு!

தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையில் தங்கம் விற்பனை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை என்றால் புத்தாடைகள் உடுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், இனிப்புகள் உண்பதும்தான் வழக்கமாக இருந்துவந்தது. கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளை தன திரையோசி நாளாக கடைப்பிடித்துவருகின்றனர். இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற நகைகளை வாங்கினால் செல்வம் பெருகும் என்று வாடிக்கையாளர்கள் நம்பி வருகின்றனர். நகை விற்பனை நிறுவனங்களும் பல்வேறு விதமான விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடி அறிவிப்புகள் வழியாக இந்த நாளில் தங்க நகைகள் வாங்க வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஊக்குவித்துவருகின்றன.

இதனால் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி 30 விழுக்காடு அளவுக்குக் கூடுதலான நகை விற்பனையாகியுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளியில் நகை விற்பனை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், தங்கத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டில் கூடுதல் ஆர்வம் காட்டியுள்ளனர்” என்றார்.

அனைத்திந்திய நகைகள் மற்றும் ரத்தினங்கள் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜி.வி.ஸ்ரீதர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்த ஆண்டு தன திரையோசி தினத்தில் தங்கத்தின் தேவை 10 முதல் 15 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விற்பனையை அதிகரிக்க, முன்பதிவு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தோம். இந்த முயற்சியால் இந்த ஆண்டு 7 முதல் 8 விழுக்காடு வரை விற்பனை அதிகரித்துள்ளது” என்றார்.

புதன், 7 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon