மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 26 பிப் 2020

ரனில் கட்சி எம்.பி.க்கள் கைதாகி விடுதலை!

ரனில் கட்சி எம்.பி.க்கள் கைதாகி விடுதலை!

இலங்கையில் ரனில் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் இன்று (நவம்பர் 5) கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். எனினும், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜெயசூர்யா, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக அங்கீகரிக்க முடியாது எனவும் இன்று (நவம்பர் 5) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஹேசன் விதாங்க், பலித தேவர பெருமா ஆகிய இரண்டு எம்.பி.க்கள் இன்று கைது செய்யப்பட்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவரும் கொல்லுபிட்டியா காவல் நிலையத்தில் ஆஜரானபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பின்னர் கோட்டை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் ரூ. ஒரு லட்சம் ரொக்க ஜாமீனில் விடுவிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி லங்கா ஜெயரத்னே, வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon