மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

இன பாகுபாடு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு கெடுபிடி!

இன பாகுபாடு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு கெடுபிடி!

அமெரிக்கர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்த விவகாரத்தில் டிசிஎஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் 13 அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாக இருக்காத பட்சத்தில் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், டிசிஎஸ் நிறுவனம் இனப் பாகுபாடுகள் காட்டுவதாக அமெரிக்க பணியாளர்கள் விடுத்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்நிறுவனம் நவம்பர் 5ஆம் தேதியன்று கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டு நிறுவனங்களின் பணியமர்த்துதல் போக்கு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடி வருகிறார். டிசிஎஸ் விவகாரத்தால் நிறுவனங்களின் பணி விசா திட்டங்கள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களுக்கும், ஆசியாவின் மிகப்பெரும் அவுட்சோர்சிங் நிறுவனமுமான டிசிஎஸ் நிறுவனத்துக்கும் அமெரிக்க மண்ணில் அதிகளவிலான அமெரிக்கர்களை பணியமர்த்தும்படி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களின் இனம் மற்றும் நாட்டின் அடிப்படையில் பணியாளர்களை டிசிஎஸ் நிறுவனம் நீக்கியதற்கான புள்ளிவிவரங்களுடன் கூடிய ஆதாரங்கள் நீதிமன்றக் குழுவிடம் இருப்பதாகத் தெரிகிறது. டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிரான புகாரில், 2011ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் தெற்காசியாவைச் சேராதவர்களில் 12.6 விழுக்காட்டினரையும், தெற்காசிய ஊழியர்களில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களையும் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon