மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

கைத்தறித் தொழிலாளர்கள் பாதிப்பு!

கைத்தறித் தொழிலாளர்கள் பாதிப்பு!

இறக்குமதிச் சலுகை நீக்கத்தால் கைத்தறிப் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் எனத் தொழில் துறை தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு 50 இந்தியப் பொருட்களுக்கான வரியற்ற இறக்குமதி சலுகைகளை அமெரிக்க அரசு ரத்து செய்திருந்தது. இந்தப் பட்டியலில் பெரும்பாலும் கைத்தறி மற்றும் வேளாண் பொருட்களே உள்ளன. அமெரிக்க அரசின் மத்திய பதிவாளர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இதுவரையில் வரி விலக்குடன் இறக்குமதி செய்யப்பட்ட 90 பொருட்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பொருட்களுக்கான இறக்குமதி வரிச் சலுகைகளை நீக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நவம்பர் 1ஆம் தேதி முதல் இப்பொருட்களை வரி விலக்குடன் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யமுடியாது.

இச்சலுகைகளால் அதிகம் பயனடைந்துவந்த இந்தியாவுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. மொத்தம் 90 பொருட்கள் அடங்கிய இப்பட்டியலில் 50 பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ளன. இதனால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் கைத்தறி ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும். இதுகுறித்து ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவரான உஜ்வால் லகோத்தி பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “உலகளவில் அதிக எண்ணிக்கையில் கைத்தறிகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கைத்தறி பொருட்களை தேவையான அளவுக்கு மற்ற நாடுகளிலிருந்து பெறுவது சாத்தியமல்ல. அமெரிக்காவின் இறக்குமதி சலுகைகளால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்க நுகர்வோரும் பயனடைவர்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon