மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு!

சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு!

வர்த்தகம் தொடர்பாக சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்த அவர், சீனப் பொருட்கள் மீது தொடர்ந்து வரி விதிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக எச்சரித்துள்ளார். இதுபற்றி அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்த சீனா மிகவும் விரும்புகிறது. சீனாவுடனான எங்களது பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது.

ஏதேனும் நல்ல நடவடிக்கையை எடுப்பதற்கு இருதரப்பும் நெருங்கி வருகிறது. நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொடர்புகொண்டு பேசினேன். அவர்களும் ஒப்பந்தத்தை உருவாக்கவே விரும்புகின்றனர். சீனாவுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்த நானும் எண்ணுகிறேன். அனைவருக்குமான நியாயமான ஒப்பந்தமாக அது இருக்கும். ஆனால், அமெரிக்காவுக்குச் சிறப்பான ஒப்பந்தமாக இருக்கும். சீனாவுடனான ஒப்பந்தத்தால் பெய்ஜிங்குக்கும் நன்மை கிடைக்கும்” என்று கூறினார். சீன அதிபருடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய டொனால்டு ட்ரம்ப், பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திங்கள், 5 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon