மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

அதைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது: மாதவன்

அதைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது: மாதவன்

நடிகர் மாதவன் நடிப்பில், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட் - தி - நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தயாராகிறது.

இந்தப் படத்தின் டீசர் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் நடிகர் மாதவன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்த உலகத்தில் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அதில் பல கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். பல கதைகள் உங்க காதுக்கே வராமல் போயிருக்கலாம். ஆனால், சில கதைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது இந்த நாட்டு மேல உங்களுக்கு அக்கறை இல்லாமல் இருப்பதற்குச் சமம்.

நம்பி நாராயணன். இவர் கதையை நீங்கள் கேட்டா, சாதனைகளைப் பார்த்தா, அதை பற்றி பேசாம இருக்க முடியாது. ராக்கெட் - தி நம்பி எஃபெக்ட். இதைப் பற்றி தெரியாதவர்கள் தெரிஞ்சிப்பாங்க. தெரியும் என்று நினைப்பவர்கள், கேட்டு மிரண்டுடுவாங்க. இந்தப் படத்தோட டீசர் பாருங்க. அக்டோபர் 31ஆம் தேதி காலை 11.30 மணிக்கு” என்று பேசியுள்ளார்.

அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய தேசிய விருது பெற்றுள்ள ஆனந்த மஹாதேவன் இந்தப் படத்தை இயக்குகிறார். 1994ஆம் ஆண்டு உளவுத் துறையால் குற்றம்சாட்டப்பட்டு கைதான நம்பி நாராயணன், 1996ஆம் ஆண்டு அக்குற்றச்சாட்டை சிபிஐ தள்ளுபடி செய்கிறது. உச்ச நீதிமன்றமும் இவ்வழக்கை 1998ஆம் ஆண்டு இவர் குற்றவாளி இல்லை எனக் கண்டறிகிறது. இதுபோன்ற வரலாற்றுக் கூறுகளின் அடிப்படையில் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல் மாதவனும் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

செவ்வாய், 30 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon