மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

வெளிநாட்டு முதலீடுகளில் பின்னடைவு!

வெளிநாட்டு முதலீடுகளில் பின்னடைவு!

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகள் 47 சதவிகிதம் சரிவடைந்துள்ளன.

வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ள கிளை நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இந்திய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்த விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மொத்தம் 1.54 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளன. இது 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட 2.91 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை விட 47 சதவிகிதம் குறைவாகும். இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் 992.14 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.

செப்டம்பர் மாதத்துக்கான வெளிநாட்டு முதலீடுகளில் கடன்கள் வாயிலாக 950.82 மில்லியன் டாலரும், பங்கு முதலீடு வாயிலாக 251.84 மில்லியன் டாலரும், உத்தரவாதப் பத்திரங்கள் வாயிலாக 352.08 மில்லியன் டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்களிலேயே அதிகபட்சமாக யு.பி.எல்., மொரீஷியஸ் நாட்டில் 408.12 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. சன்மார் குரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் சுவிட்சர்லாந்தில் 77.55 மில்லியன் டாலரையும், ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனம் அமெரிக்காவில் 74.87 மில்லியன் டாலரையும் முதலீடு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 30 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon