மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

கார் விற்பனை: மாருதி சுஸுகி ஆதிக்கம்!

கார் விற்பனை: மாருதி சுஸுகி ஆதிக்கம்!

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களுக்கான பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏழு மாடல்கள் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கின்றன.

சென்ற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனையான கார்களின் விவரங்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதிகம் விற்பனையான 10 மாடல்களின் பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏழு கார்களும், ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்று கார்களும் இடம்பெற்றுள்ளன. செப்டம்பரில் விற்பனையான மொத்த கார்களில் அதிகபட்சமாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் கார்கள் மொத்தம் 22,228 எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் அதிகம் விற்பனையான 10 மாடல்களின் பட்டியலில் ஸ்விஃப்ட் கார் முதலிடம் பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் இதன் விற்பனை எண்ணிக்கை 13,193 ஆக மட்டுமே இருந்தது.

மாருதியின் ஆல்டோ மாடலில் 21,719 கார்கள் விற்பனையாகியுள்ளதால் இந்த மாடல் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் டிசையர் கார்கள் மூன்றாம் இடத்தில் உள்ளன. இதன் விற்பனை எண்ணிக்கை 21,296 யூனிட் ஆகும். நான்காம் இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி பலேனோ (18,631 கார்கள்). மாருதி சுஸுகி நிறுவனத்தின் விடரா பிரேஸா (14,425 கார்கள்) ஐந்தாம் இடத்திலும், வேகன் ஆர் (13,252 கார்கள்) ஆறாம் இடத்திலும் இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ-20 மாடல் (12,380 கார்கள்) ஏழாம் இடத்திலும், கிராண்ட் ஐ-10 (11,224 கார்கள்) எட்டாம் இடத்திலும், கிரேட்டா (11,000 கார்கள்) ஒன்பதாவது இடத்திலும் இருக்கின்றன. பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்தில் மாருதி சுஸுகி செலெரியா மாடல் உள்ளது. செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 9,208 செலரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய், 23 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon