மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

மீ டூ எதிரொலி: மன்னிப்புக் கேட்ட நடிகரின் மனைவி!

மீ டூ எதிரொலி: மன்னிப்புக் கேட்ட நடிகரின் மனைவி!

நடிகர் ஜான் விஜய் மீது தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி பாலியல் புகார் சுமத்தியதை அடுத்து ஜான் விஜய்யின் மனைவி, ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியாவையும் ஆட்டிப்படைக்கிறது மீ டூ. பெண்கள் பாலியல் ரீதியாகத் தங்களுக்கு நேர்ந்த தொல்லைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக அமைந்த இந்த மீ டூவால் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் சிக்கி வருகின்றனர். தமிழகத்தில் வைரமுத்து மீது சின்மயியும், சுசி கணேசன் மீது லீனா மணிமேகலையும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் நடிகர்கள் ஜான் விஜய், ராதாரவி, நடன அமைப்பாளர் கல்யாண் ஆகியோரும் இதில் சிக்கினர்.

இந்த நிலையில் நடிகர் அமித் பார்கவின் மனைவியும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி, நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் தொல்லை புகார் கூறியிருந்தார். மேலும், கடம் வித்துவான் உமா சங்கர், அலுவலகம் ஒன்றில் தான் பணியாற்றியபோது, தனது இடுப்பைக் கிள்ளினார் என மற்றொரு பதிவில் கூறியிருக்கிறார்.

இந்தப் புகாரை அடுத்து, நடிகர் ஜான் விஜய்யின் மனைவி நடந்த விஷயங்களைக் கேட்டறிந்ததாகவும், தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார் ஸ்ரீரஞ்சனி. அவர் தானாக முன் வந்து மன்னிப்புக் கோரியதை உண்மையாகப் பாராட்டுகிறேன் எனக் கூறியுள்ளார் ஸ்ரீரஞ்சனி.

வெள்ளி, 19 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon