மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

டேப்லெட் விற்பனையில் அதிக கவனம்!

டேப்லெட் விற்பனையில் அதிக கவனம்!

இந்தியாவில் பிரீமியம் டேப்லெட்களுக்கான சந்தையில் தனது பங்கை இரட்டிப்பாக்கும் இலக்கில் செயல்பட்டு வருவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்திவரும் சாம்சங் நிறுவனம், மொபைல் போன்கள் மட்டுமல்லாமல் டேப்லெட் விற்பனையிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காகப் பல்வேறு புதிய மாடல் டேப்லெட்களை இந்தியாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் டேப்லெட் சந்தை மதிப்பை இரண்டு மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இதுகுறித்து சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மொபைல் பிரிவு பொது இயக்குநரான ஆதித்யா பாபர், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “பிரீமியம் டேப்லெட் பிரிவில் கேலக்ஸி டேப் எஸ்4 மாடலை நாங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தினோம். இதன் விலை ரூ.57,900. இதைத் தனிநபர் பயன்பாட்டுக் கணினியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜிஎஃப்கே நிறுவனத்தின் ஆய்வுப்படி, உயர் ரக டேப்லெட் பிரிவில் எங்களது சந்தைப் பங்கு 29 சதவிகிதமாக இருக்கிறது. ஏற்கெனவே எங்களது டேப்லெட்களை அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைத் தளங்கள் வாயிலாக விற்பனை செய்யத் தொடங்கிவிட்டோம். டிசம்பர் மாதத்துக்குள் எங்களது சந்தைப் பங்கை இரட்டிப்பாக்குவதே இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 18 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon