மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

உலகுக்குச் சீனம் தந்த விளையாட்டு!

உலகுக்குச் சீனம் தந்த விளையாட்டு!

தினப் பெட்டகம் – 10 (19.10.2018)

உலகின் மிகப் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று, கால்பந்து. கால்பந்தைப் பற்றி:

1. கால்பந்து சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டாம்.

2. உலகில் அதிகமாகப் பார்க்கப்படும், விளையாடப்படும் விளையாட்டு கால்பந்து.

3. உலகம் முழுவதும், கால்பந்தை ஆங்கிலத்தில் ‘Football’ என்றே சொல்வார்கள். கனடா மற்றும் அமெரிக்கா நாட்டில் மட்டும் ஆங்கிலத்தில் “சாக்கர்” (souccur) என்று சொல்வார்கள்.

4. ஒவ்வொரு கால்பந்து விளையாட்டிலும், விளையாட்டு வீரர்கள் ஏறத்தாழ 9.65 கிமீ தூரம் ஓடுவார்கள்.

5. முதலில் கூடைப்பந்து விளையாட்டு, கால்பந்தை வைத்துத்தான் விளையாடப்பட்டது.

6. உலகத்தில் கிடைக்கும் கால்பந்துகளில் 80% பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை.

7. ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தின் நீளம், 100 யார்ட்!

8. கால்பந்து போட்டிகளில் விளையாடும் கால்பந்துகளின் அளவு, கடந்த 120 ஆண்டுகளாக ஒரே அளவாகவே இருக்கிறது. விட்டம்: 28 அங்குலம்.

9. உலகிலுள்ள மிகப்பெரிய கால்பந்து விளையாட்டு மைதானம், வடகொரியாவிலுள்ள Rungrado May Day மைதானம்.

10. ஒரு கால்பந்து அணியிலிருக்கும் வீரர்களின் எண்ணிக்கை 11.

- ஆஸிஃபா

வியாழன், 18 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon