மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 15 அக் 2018

ஆறு மாதங்களில் சிமென்ட் விலை உயரும்!

ஆறு மாதங்களில் சிமென்ட் விலை உயரும்!

அடுத்த ஆறு மாதங்களில் சிமென்ட் விலை 10 விழுக்காடு வரை உயரும் என்று தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வாலும், போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதாலும் அடுத்த ஆறு மாதங்களில் சிமென்ட் விலை 10 விழுக்காடு வரை உயரும் என்று சிமென்ட் உற்பத்தி தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர். சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தகவல்களின்படி, 2018-19ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சிமென்ட் உற்பத்தியில் 14 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த சிமென்ட் விலைகளைத் திருத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான சைலேந்திர சௌக்சி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “சிமென்ட் விலையை திருத்துவதற்குக் கடுமையான அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் எரிபொருள் விலை 60 முதல் 70 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதை நாம் கண்டுள்ளோம். இந்த உயர்விலிருந்து மீள்வதற்காகவாவது சிமென்ட் விலையை நாங்கள் உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. 2011-12ஆம் ஆண்டில் சிமென்ட் மூட்டை என்ன விலைக்கு விற்பனையானதோ ஏறத்தாழ அதே விலையில்தான் இன்றளவிலும் விற்பனை செய்கிறோம். அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு சிமென்ட் விலைகளைத் திருத்துவது சரியாக இருக்குமென்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 15 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon