மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

விளம்பரம்

தற்போதைய உலகம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தரை வழிப்பயணம் மிகச் சாதாரணமானதாக இருந்தது. ஆனால், அப்போது பயணித்த தூரம் அதிகமாக இருந்தது. எவ்வளவு தூரம் எனக் கணக்கிட முடியாத தொலைவுகளை தரைவழியாகவே கடந்தனர் மக்கள். கடல்வழிப் பயணம் சுலபத்தில் தொலைந்துபோகக்கூடியதாக இருந்தாலும், ஆமைகளின் உதவியால் அதனை சுலபமானதாக மாற்றினார்கள் இந்தியப் பெருங்கடலில் பயணப்பட்டவர்கள். இப்போது வான்வழிப் பயணம் அறிமுகமாகியிருக்கிறது. அதிவேகமானதும், இலகுவானதாகவும் இருக்கும் இந்த வான்வழிப்பயணம் மனித இனத்துக்குப் புதிது. 157 வருடங்களாகத்தான் வான்வழிப் பயணத்தைப் பயன்படுத்தி வருகிறோம். புதிதாகப் பழகிவரும் இந்தப் போக்குவரத்தில் இன்னும் எவ்வளவோ புதிய வசதிகளைச் செய்யலாம். அதற்கு அடிப்படையாக, அதில் பயணிக்கும் மக்கள் மீதான கரிசனமும், அவர்களது தேவைகளைப் புரிந்துகொள்ளும் மன ரீதியான உரையாடலும் தேவை. ஒரு நாட்டு மக்கள் எந்த இடங்களை அதிகம் விரும்புகிறார்களோ, அந்த இடத்துக்கான விமான எண்ணிக்கையை அதிகரிப்பதென்பது விமானம் இல்லாததால் ஒரு மனிதனின் பயணத் திட்டம் எந்த விதத்திலும் மாறிவிடக்கூடாது என்ற சேவை மனப்பான்மை இல்லாமல் வராது. அதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எப்படி செய்திருக்கிறது?

இந்தியாவின் முக்கியமான 14 நகரங்களிலிருந்து 135 விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இயக்குகிறது. அவற்றில் 56 விமானங்களை சென்னையிலிருந்து மட்டும் இயக்குகிறார்கள். சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு நகரத்துக்குச் செல்லும் இந்த 56 விமானங்கள் அங்கிருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கும் பறக்கின்றன. பல மணி நேரங்கள் வரிசையில் நின்று விசா எடுத்து, பிறகு பலமணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு விமானத்தில் ஏறி, அதன்பிறகும் பலமணி நேரப் பயணம் என்ற அயர்ச்சியிலிருந்து சுற்றுலா பயணிகளைக் காப்பாற்றுவதற்காகவே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முக்கியமான சுற்றுலா நகரங்களுக்கு தனது விமான சேவையை அதிகரித்துள்ளது. எண்ணிக்கை அதிகரிக்கும்போது தரம் குறையும் என்ற கூற்றினை முறியடிக்கவேண்டும் என்பதனைக் கருத்தில்கொண்டு எந்த வசதிக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்களோ, அதனை எவ்வித சமரசமுமின்றி செய்துகொடுப்பதால் தான், அதிக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இருக்கிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைப் போலவே, ஐரோப்பிய கண்டத்தில் சிறப்பான விமான சேவையை வழங்கியதற்காக எமிரேட்ஸ் நிறுவனத்துக்கும், மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு ஓமன் நிறுவனத்துக்கும், பசிபிக் பகுதிகளுக்கு தாய் நிறுவனத்துக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு சிறப்புகளை சுற்றுலாத் துறைக்குச் செய்துகொடுத்துள்ள இந்நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட விருதுகளை அத்தனை சாதாரணமாகக் கொடுத்துவிடுவார்களா. 2000 பார்வையாளர்கள் மத்தியில், 1000 பிரபலங்கள் சூழ்ந்திருக்க பலவித கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற அந்த நிகழ்வில் நடந்தது என்ன? அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பயணம் தொடரும் .......

விளம்பர பகுதி

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon