மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

குறையும் வாராக் கடன்கள்!

குறையும் வாராக் கடன்கள்!

கடன் வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இந்திய வங்கிகளின் வாராக் கடன்கள் குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகவே வாராக் கடன் பிரச்சினைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பொதுத் துறை வங்கிகள் வழங்கும் பெரும்பாலான கடன்கள் வாராக் கடன்களாக மாறிவிடுகின்றன. இதுதவிர வங்கி மோசடிகள் மேலும் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. வங்கிகளை மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி உடனடி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிகளின் நிதிநிலை மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் வங்கிகளின் வாராக் கடன்களின் அளவு குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான விரல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 12ஆம் தேதி மும்பை ஐஐடியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் விரல் ஆச்சார்யா பேசுகையில், “11 பொதுத் துறை வங்கிகளின் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் உடனடி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நாங்கள் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருந்திருந்தால் வாராக் கடன்கள் இன்னும் அதிகரித்திருக்கும். 2011ஆம் ஆண்டிலிருந்தே இந்திய வங்கிகள் வாராக் கடன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இப்போது சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சில வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு வாராக் கடன் பிரச்சினையிலிருந்து அவை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன. அவற்றின் நிதிநிலையும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. வங்கிகளுக்கு மறு மூலதன உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வுதவி முழுவதும் விரைந்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon