மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கம்!

குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கம்!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள காசிபாளையம் பணிமனையில் இன்று (அக்டோபர் 13) புதிதாக 5 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கான தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். அவர், புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்துப் பேசிய அவர், பள்ளிகளில் ஜனவரி மாதத்திற்குப் பிறகு பாலித்தீன் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றார். “ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே, இது குறித்து முதல்வர், சுற்றுச்சுழல் அமைச்சர் அனைவரிடமும் பேசினர். அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறையும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாவட்ட வாரியாகப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாலித்தீன் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும். இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் போக்குவரத்துத் துறை தொடர்பாகப் பேசியவர், ஈரோடு மண்டலத்திற்கு மட்டும் 112 புதிய வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 51 வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “56 வாகனங்கள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 5 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்கள் நலன் கருதி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், லாபம் நோக்கம் எதுவும் இல்லை.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் நலத் துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon