மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியா: அப்டேட் குமாரு

ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியா: அப்டேட் குமாரு

சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோன்னு வித்தியாசமான பேரை எல்லாம் படிச்சு மனப்பாடம் பண்ணி ஓட்டிகிட்டு இருந்தவங்க, இப்ப பழைய சிலபஸை தேடி படிக்க ஆரம்பிக்கிறாங்கன்னு ஒருத்தர் இன்பாக்ஸ்ல வந்து சொன்னாரு. என்ன அந்த பழைய சிலபஸுன்னு பார்த்தா தியாகத் தலைவி சின்னம்மான்னு சொல்லிட்டு போறாங்க. இன்னொரு பக்கம் வளர்மதி ஆர்மின்னு ஒரு குரூப் கிளம்புதாம். என்னன்னு விசாரிச்சா அதிமுகவில் மீண்டும் பெண் தலைமைன்னு நம்ம செல்லூரார் சொல்ல அது யாரா இருக்கும்னு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிகிட்டு இருக்காங்க. நீங்க அப்டேட்டை பாருங்க. சம்பந்தியை பேஸ்ஃபுக் பிரெண்ட் லிஸ்ட்லயாவது சேர்க்க முடியுமான்னு பார்த்துட்டு வாரேன்.

@manipmp

பெட்ரோல் இல்லாம பைக் தள்ளிட்டு போகும்போது தெரியும்..

நம்மை மதிக்காமல் செல்வோரின் எண்ணிக்கை.!

@Anandh_offl

எடப்பாடியின் சம்பந்தி சட்டப்படி உறவினர் பட்டியலில் வர மாட்டார்- பொன்னையன் #

// ஆமா இவரு பினாமி பட்டியல்லதான வருவாரு..

@ajmalnks

விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

அப்பதான் எல்லா அமைச்சர்களும் பழையபடி அடங்கி இருப்பாங்கன்னு சொல்ல வர்றாரு.

@HAJAMYDEENNKS

ஆளும்கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சி இருப்பது அதிமுகவில்தான் !

@itz_azha

கடந்து போகும்

பாதையில்,

யாரோ ஒருவர்

மறக்க நினைக்கும்

சிலரை நினைவுப்படுத்தி சென்றுவிடுகின்றனர்..

@madurai_jinna

பழனிச்சாமி அரசின் மீது தொடர்ந்து எழும் ஊழல் புகார்கள்., தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவு - தினகரன்

சசிகலா வழி வந்தவங்கணே., அப்படிதான் இருப்பாங்க.!

@shivaas_twitz

மனைவிமார்களின் சித்ரவதைகளை கணவன்மார்கள் 'மீ டூ' டேக் மூலம் பதிவிட முடிவெடுத்துள்ளதால் இணையம் முடங்கும் அபாயம்

இணைய_முடக்கம்

@sultan_Twitz

"ஆண்டாளை பழித்த கவிஞரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறார்" - தமிழிசை #

தம்ராஸ் நாராயணனும் ஆண்டாள் பக்தர் என்பதை மறக்கவேண்டாம்!!

@yugarajesh2

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது- பொன்.ராதா

அட! நீங்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிலேயே ஒருத்தனும் உயிரோடு இருக்க முடியாது போல..!!

@rahimgazali

நண்பர்களுடன் சாப்பிடும்போது ஒரு கோப்பையில் பொதுவாக வைக்கப்படும் மட்டனோ, சிக்கனோ எல்லாரும் எடுத்து முடித்தபின் மிச்சமிருக்கும் கடைசி துண்டு நாகரீகம் கருதி யாராலும் எடுக்கப்படுவதில்லை.

@Annaiinpillai

சபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் - செய்தி#

பெட்ரோல் விலை ஏற்றம்லாம் கண்ணுக்கு தெரியாதா அக்கா உங்களுக்கு

@TalksssTweet

ருசியில்லன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடற குணமெல்லாம், நாமே சமைச்சு சாப்பிடும் போது வந்துருது.

@rahimgazali

அமமுகவுடன் அதிமுக இணைக்கப்படும் - தினகரன்

ஃபெவிகால் வாங்க ஆர்டர் போட்டாச்சா?!

@parveenyunus

தமிழகம் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்-தமிழிசை # நீங்க மீம்ஸ் கிரியேட்ட்ர்களை ஈர்க்கற மாதிரியா..?

@sultan_Twitz

முதல்வர் பதவியை ராஜினாமா பண்ணனும்னா இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் முதல்வர் ஆட்சியில் இருக்க முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜூ #

இப்பதான் விஞ்ஞானி தெளிவா பேசிருக்காரு..?!

@rahimgazali

வருங்காலத்தில் அதிமுகவை யாராவது ஒரு பெண் வழிநடத்தும் காலகட்டம் வரும் - செல்லூர் ராஜூ #

சசிகலாவை மைண்ட்ல வச்சு சொல்றாரா? வளர்மதியை மைண்ட்ல வச்சு சொல்றாரான்னு தெரியலியே?!

@nandhu_twitts

கோவமாய் இருப்பது போல் நடிப்பவர்களின் முகத்தை பார்த்தாலே..

நமக்கு வடிவேலு நியாபகம் வந்து விடுகிறது..!!

@HAJAMYDEENNKS

ஒரு முதலமைச்சர் மீது ஊழல் புகார்..சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறது நீதிமன்றம்..குறைந்தபட்சமாக முதலமைச்சர் மக்களிடம் விளக்கம் அளித்திருக்க வேண்டும்..ஆனால் இது கட்சி பிரச்சினை போல பொன்னையன் பேசுறாரு..பொன்னையனின் வரலாறை தோண்டினால் அம்மா இட்லி சாப்பிட்டாங்க என்ற பொய்தான் ஞாபகம் வருது

@ajmalnks

திமுகவோடு நிச்சயம் கூட்டணி கிடையாது - கமல்ஹாசன்

கமலின் கருத்தை வரவேற்கிறேன்னு தமிழிசை அக்கா இன்னுமா அறிக்கை விடாமல் இருக்கு?...

@19SIVA25

அதிமுக மற்றும் திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் - கமலஹாசன்

கழகங்கள் இல்லா தமிழகம்..! ஒரே டாயலாக் தானே..! மாடுலேஷன் வேற !!

-லாக் ஆஃப்

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon