மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 அக் 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

படம் ஆரம்பம்..!

"இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாச்சுனு உனக்கு சொல்லணும்னு எனக்கு ஆசைதான். ஆனா அது உனக்கு புரியாதது, தேவையில்லாதது" என்றது அதிசயத் தட்டு.

"பின்ன எதுக்கு பிரபஞ்சத்துக்கு கூப்பிட்டு வந்த?" என்றான் பரி.

"திரும்பிப் பார்"

பரி இப்போ தன்னோட பார்வையை சூரியனிலிருந்து விலக்கி, தனக்குப் பின்னாடி பாத்தான். திரும்பிப் பார்த்த நொடி தட்டு படு வேகமா பயணிக்க ஆரம்பிச்சது. தட்டு தூரம் போக போக, சூரியன் சுருங்க ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல சூரியன் ஒரு புள்ளியா மாறிடுச்சு.

"இதுதான் நீ பூமியில இருந்து பாத்த வில் அம்பு நட்சத்திரக் கூட்டம்." சொன்னது தட்டு.

வியந்து பாத்தான் பரி. சூரியக் குடும்பத்துல இருந்து வெகு தூரம் வந்தும், இன்னும் தூரமா இருக்கு நட்சத்திரக் கூட்டம்.

"இந்த இடத்துல இருந்து உனக்கு ஒரு படம் காட்டப் போறேன்." னு சொல்லி பிரபஞ்சத்தோட நடுவுல பரியன கீழ போட்டது தட்டு. பிரியன் பயத்துல கண்ணை மூடிக்கிட்டு கத்திட்டே விழ ஆரம்பிச்சான்.

"அய்யயோ. தண்ணிக்குள்ள இருந்து காப்பாத்தி, இங்க வந்து தள்ளிவிட்டுட்டியே"ன்னு திட்டினான் பரி.

"நான் தள்ளியும் விடல, நீ கீழ விழாவும் இல்ல. இந்த பிரபஞ்சத்துல எல்லாமே மிதந்துட்டுதான் இருக்கும். எதுவும் விழாது. விழவும் முடியாது. இங்க விசையே கிடையாது"ன்னு தட்டு சொல்லி முடிக்கும்போது கண்களைத் திறந்து பாத்தான் பரி.

"அட ஆமா. யப்பா, குளத்துல தண்ணீல மிதக்குற மாதிரிதான் விண்வெளியும் இருக்கு. இங்கையும் ஜாலியா மிதக்கலாம் போலையே.. ஹையா.." அப்படியே நீந்திக்கிட்டே கேட்டான் பரி. "சரி, எதுக்கு இப்போ என்னை இறக்கிவிட்ட?"

தட்டு பதிலெதுவும் சொல்லாமல் பரியின் முன் வந்து ரொம்ப வேகமா சுத்த ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாத அளவுக்கு வேகம். வேகத்தோட உச்சத்துல தட்டு வெடிச்சு சிதறி காணாம போச்சு.

விண்வெளிக்கு நடுவுல இப்படி தனியா விட்டுட்டு தட்டு காணாம போனத கண்ணால பாத்த பரி பதற ஆரம்பிச்சான்.

"யாரவது இருக்கீங்களா?" கத்தினான் பரி.

"இதோ உனக்கான படம் தொடங்குகிறது".. தூரத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது..!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

சனி 13 அக் 2018