மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ஜிகா வைரஸ்: 50 பேருக்கு பாதிப்பு!

ஜிகா வைரஸ்: 50 பேருக்கு பாதிப்பு!

ஜிகா வைரஸ் பாதிப்பினால் 50க்கு மேற்பட்டோர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

டெங்குவைப் போன்று காய்ச்சல், தோல் பாதிப்பு, தசை மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி ஆகியவை ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். தற்போது ராஜஸ்தானில் ஏற்பட்டிருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்குமாறு, கடந்த 9ஆம் தேதியன்று சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் கேட்டிருந்தது பிரதமர் அலுவலகம். நோய் கட்டுப்படுத்தலுக்கான தேசிய மையத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ள மத்திய அரசு, நிலைமையைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, ஜெய்ப்பூருக்கு 7 மருத்துவக் குழுக்கள் சென்றுள்ளன. அங்கு நிலைமையைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளதாகச் சந்தேகப்படும் பகுதிகளில் மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர். அங்கு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.

ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர்களில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஜிகா வைரஸ் பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 170 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஜிகா வைரஸ் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon