மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

திரிபுரா: தடைகளை உடைத்த சி.பி.எம். நாளேடு!

திரிபுரா: தடைகளை உடைத்த சி.பி.எம். நாளேடு!

திரிபுராவில் 40 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவந்து கொண்டிருந்த தேசார் கதா தடையை உடைத்து மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

திரிபுராவில் பழங்குடி இன மக்களும் வங்க மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். அம்மாநிலத்தில் 40 ஆண்டுகாலமாக வங்க மொழியில் தேசர் கதா என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு வெளிவந்து கொண்டிருந்தது.

அண்மையில் நடைபெற்ற திரிபுரா சட்டசபை தேர்தலில் கால் நூற்றாண்டு கால மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியை ஒடுக்கும் அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அக்கட்சியின் தொண்டர்கள், அலுவலகங்கள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. திரிபுராவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பிரமாண்ட லெனின் சிலை இடித்து தகர்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தேசர் காதா எனும் நாளேட்டுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. அந்த நாளேட்டின் பதிவு விவரங்களில் முறைகேடு இருப்பதாக இத்தடை விதிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் இத்தடை விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இத்தடையை எதிர்த்து திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தேசர் கதா நாளேடு 10 நாட்களாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தேசர் கதா மீதான தடையை திரிபுரா நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.

இதையடுத்து தேசர் கதா நாளேடு கடந்த 10ஆம் தேதி முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது கருத்து சுதந்திரத்துக்கான வெற்றியாக பத்திரிகையாளர்களால் கொண்டாடப்படுகிறது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon