மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

மதுரையில் எய்ம்ஸ்:மண் பரிசோதனை முடிந்தது!

மதுரையில் எய்ம்ஸ்:மண் பரிசோதனை முடிந்தது!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பணிகள் சுணக்கம் இன்றி நடைபெற்று வருவதாகவும், அங்கு மண் பரிசோதனை முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

மதுரை மாவட்டத்தில் ரூ.150 கோடி செலவில் அமைய உள்ள பன்னோக்குச் சிறப்பு மருத்துவமனையின் கட்டடப் பணிகளை நேற்று (அக்டோபர் 12) பார்வையிட்டார் தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். அப்போது, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

"தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பன்னோக்குச் சிறப்பு மருத்துவமனைகளை விரைவில் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் வலியுறுத்தியுள்ளோம். அதன்படி மிகவிரைவில் பன்னோக்குச் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

"மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக, பணிகள் சுணக்கம் இன்றி நடைபெற்று வருகிறது. மண் பரிசோதனையும் தற்போது முடிவடைந்துள்ளது. அடுத்த 45 நாட்களில் அதற்கான ஆணை கிடைக்கும்" எனத் தெரிவித்தார் ராதாகிருஷ்ணன். "மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon