மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

புதிய வங்கிக் கிளைகள் குறைவது ஏன்?

புதிய வங்கிக் கிளைகள் குறைவது ஏன்?

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால் வங்கிகள் புதிய கிளைகளைத் திறக்கும் நடவடிக்கை இந்தியாவில் குறைந்துள்ளது.

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு, ரொக்கப் பரிவர்த்தனை குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே புதிய வங்கிக் கிளைகளைத் திறந்து மக்களுக்குக் கூடுதல் சேவை வழங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனதாக வங்கித் துறையினர் கூறுகின்றனர். வங்கிப் பரிவர்த்தனைகளில் சுமார் 85 சதவிகிதம் அளவு டிஜிட்டல் முறையிலேயே நடைபெறுவதாக கோடாக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநாரான தீபக் குப்தா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் நாடு முழுவதும் வங்கிக் கிளைகளைத் திறக்கத்தான் செய்வோம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல வங்கிக் கிளையைத் திறக்கும் வேகம் இப்போது இல்லை. ஏனெனில், மக்கள் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே அதிகமாக மேற்கொள்கின்றனர். எனவே அதிக வங்கிக் கிளைகள் இருப்பதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. மக்களின் கைகளில் உள்ள மொபைல் போன்களிலேயே அனைத்தும் இருக்கிறது. எனினும் வர்த்தக வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் ரொக்கப் பரிவர்த்தனைக்கு வங்கிகளையே நாடி வருகின்றனர். எனவே புதிய வங்கிக் கிளைகளுக்கான தேவையும் உள்ளது” என்றார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon