மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

புயல்: விரைவு ரயில்கள் ரத்து!

புயல்: விரைவு ரயில்கள் ரத்து!

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் நான்கு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆந்திராவுக்கும் ஒடிசாவுக்கும் இடையே டிட்லி புயல் கரையைக் கடந்தது. இதனால் இரு மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகள் பலத்த அளவில் சேதத்தைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், மீண்டும் ஆந்திர மாநிலம் விஜயநகரம்-வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

"ஆந்திராவில் விஜயநகரம் - வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இயக்கப்பட இருந்த விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு (வண்டி எண்: 22801) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல இன்று (அக்டோபர்13) சென்னை சென்ட்ரல் மற்றும் விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு (22801) ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை (அக்டோபர் 14) திருவனந்தபுரம் சென்டிரல் - சில்சார் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12515) மற்றும் கவுகாத்தி - பெங்களூரு கன்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ் (12510) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon