மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

பணிபுரியச் சிறந்த நாடுகள் எவை?

பணிபுரியச் சிறந்த நாடுகள் எவை?

பணி நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லச் சிறந்த நாடுகளின் பட்டியலை ஹெச்.எஸ்.பி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுக்குச் சென்று சவுகரியமான வாழ்க்கை, நல்ல சம்பளத்துடனான வேலையைத் தேடுவதற்கான திட்டத்தில் இருக்கிறீர்களா? எந்த நாட்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்று குழப்பமாக உள்ளதா? உங்களுக்கு உதவி செய்வதற்காகவே ஹெச்.எஸ்.பி.சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்றால் எங்கு சிறந்த வசதிகள் கிடைக்கும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கை, குழந்தைகளின் நலன் என்று ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளிலும் சிங்கப்பூர் வெற்றி பெற்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாகவே சிங்கப்பூர்தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

“வெளிநாட்டுக்குச் செல்ல முயலும் ஒருவர் விரும்பும் அனைத்துமே சிங்கப்பூரில் உள்ளது” என்று இந்த அறிக்கை கூறுகிறது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் உள்ளன. வெளிநாடுகளுக்குச் சென்றதால் தங்களது சம்பளம் 45 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் பதிலளித்துள்ளனர். சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஹாங்காங் ஆகிய இடங்களில் மிகச்சிறந்த வாய்ப்புகள் அளிக்கப்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டவருக்குச் சிறந்த சம்பளம் வழங்கும் நாடாக சுவிட்சர்லாந்து உள்ளது. குடும்பம் மற்றும் குழந்தை நலனுக்குச் சிறந்த நாடாக சுவீடன் உள்ளது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon