மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 13 ஆக 2020

விஜயகாந்த் புதுவீட்டில் களவுபோன ‘மாடுகள்’!

விஜயகாந்த் புதுவீட்டில் களவுபோன ‘மாடுகள்’!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்குச் சொந்தமான மாடுகள் திருடப்பட்டிருப்பது அவரது குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விஜயகாந்தும் அவரது குடும்பத்தினரும் சடங்கு சம்பிரதாயங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஆண்டுதோறும் பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் திருநாளில் விஜயகாந்த் குடும்பத்துடன் மாடுகளுக்கு உணவளித்து மகிழ்வார்.

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டிருந்தார். சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய விஜயகாந்த், சென்னை அருகே காட்டுப்பாக்கத்தில் தான் கட்டிய புதிய வீட்டுக்கு அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அங்கே மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றோடு அமைதியாகத் தனது ஓய்வு நேரத்தைச் செலவிட்டு வந்தார் விஜயகாந்த்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 12) வெள்ளிக் கிழமை

காலையில் புதிய வீட்டின் தொழுவத்துக்குச் சென்ற பணியாளர்கள் 2 பசுமாடுகளைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விஜயகாந்த் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக் கிழமையும் அதுவுமாய், குறிப்பாக நவராத்திரி வெள்ளிக் கிழமையன்று பசுமாடுகள் களவாடப்பட்டது குறித்து விஜயகாந்த் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாடுகள் களவாடப்பட்டது தொடர்பாக விஜயகாந்த் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon