மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா!

ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா!

இளையோர் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அர்ஜெண்டினாவின் பியூரோஸ் ஏர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அக்டோபர் 12ஆம் தேதி நடந்த ஹாக்கி போட்டியில் போலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆட்டம் தொடங்கிய 8ஆவது நிமிடத்திலேயே ஷிவம் ஆனந்த் ஒரு கோலையும், மனிந்தர் சிங் 2ஆவது கோலையும், சஞ்சய் 17ஆவது நிமிடத்தில் 3ஆவது கோலையும் போட்டு இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினர். ஒட்டுமொத்தமாக இந்திய 4 கோல்களை அடித்தது, போலாந்து அணி 2 கோல்களை மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.

பெண்கள் ஹாக்கி அணியைப் பொறுத்தவரையில் இந்தியா காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இதையடுத்து இன்று போலாந்து நாட்டுடன் நடந்த காலிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரர் லக்‌ஷ்யா சென் ஜப்பானின் கொடய் நரோகாவை 14-21, 21-15, 24-22 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். நீச்சல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் தோல்வியைத் தழுவி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். முதல் 8 இடங்களைப் பெறும் வீரர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். ஆனால் நட்ராஜ் 13ஆவது இடத்தையே பிடித்தார்.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon