மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

சிக்கல்களுக்கு நடுவே முடித்துக்காட்டிய கங்கனா

சிக்கல்களுக்கு நடுவே முடித்துக்காட்டிய கங்கனா

கங்கனா ரணாவத் பிரதான வேடம் ஏற்று நடித்துவந்த மணிகார்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் மணிகார்னிகா படத்தை கிரிஷ் இயக்கிவந்தார். படப்பிடிப்பு 75 சதவிகிதம் நிறைவடைந்திருந்த நிலையில் அவர் படத்திலிருந்து விலகினார். இதனால் நாயகியாக வலம் வந்த கங்கனா இயக்குநராகவும் களமிறங்கினார். பிரம்மாண்ட பொருட்செலவில் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படம் 19ஆம் நூற்றாண்டை கண்முன்நிறுத்தும் விதமாக உருவாகிவருகிறது. கிரிஷ் விலகியதைத் தொடர்ந்து சோனம் சூட், சுவாதி சேம்வாலும் விலகியதால் படக்குழு அதிர்ச்சிக்குள்ளானது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளையும் கடந்து கங்கனா இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்திலுள்ள மகேஷ்வர் கோட்டையில் இன்று (அக்டோபர் 13) படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் அங்கு எடுத்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் வரும் ஜனவரி 25ஆம் தேதி படத்தை வெளியிட முடிவுசெய்துள்ளனர். அதே நாளில் இயக்குநர் கிரிஷ் தற்போது இயக்கி வரும் என்.டி.ஆரின் பயோ பிக் படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

சனி, 13 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon