மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 அக் 2018

சிலைகள் மாயம்: அதிகாரியிடம் விசாரணை!

சிலைகள் மாயம்: அதிகாரியிடம் விசாரணை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக, நேற்று இரண்டாவது நாளாகச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி, அக்கோயிலில்வர்ணப்பூச்சு, சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கோயிலில் இருந்த புன்னைவன நாதர், ராகு, கேதுஆகிய மூன்று சிலைகள் மாற்றப்பட்டு, புதிய சிலைகள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதிகள், மயிலாப்பூர் கோயிலில் சிலைகள் ஏதேனும் மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைநடத்தும்படி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, அக்கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் (அக்டோபர் 11) அக்கோயிலில் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுபோலீசார் ஆய்வு செய்தனர். சோதனையின் போது மயில் சிலை மற்றும் ராகு - கேது சிலைகள் மாற்றப்பட்டதுகண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

சனி 13 அக் 2018