மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

பேரழிவுகளைக் குறைக்க என்ன வழி?

பேரழிவுகளைக் குறைக்க என்ன வழி?

தினப் பெட்டகம் – 10 (13.10.2018)

இன்று சர்வதேச இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு நாள் (International day for natural disaster reduction).

1. இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு நாள், ஐநா சபையால் ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

2. இயற்கைப் பேரழிவுகள் மூலம் நடக்கும் பேரிழப்புகளைக் குறைப்பதற்காகவும், அரசு மற்றும் சமூகத்தை, பாதுகாப்பான ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்வதற்காகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

3. 1989ஆம் ஆண்டு இந்நாளைக் கோண்டாடுவதாக முதன்முறையாக முடிவெடுக்கப்பட்டது.

4. 1990-1999ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளும் இயற்கைப் பேரழிவு குறைப்புக்கான சர்வதேச தசாப்தமாகக் (International Decade for Natural Disaster Reduction) கொண்டாடப்பட்டது. இந்த பத்து ஆண்டுகள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன் பிறகு, அனைத்து ஆண்டுகளும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

5. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எப்படி இயற்கைப் பேரழிவுகளிலிருந்து தங்களைக் காத்து கொள்கின்றனர், என்ன மாதிரியான எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதைக் குறித்த தகவல்கள் இந்நாளில் சேகரிக்கப்படும்.

6. இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உயிர், பொருள் மற்றும் எந்தவொரு சேதத்தையும் தடுக்கும் நோக்கத்தோடு, இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

7. இந்தியாவில் உள்நாட்டு அமைச்சகம், National Disaster Management Authority எனும் அமைப்பை 2005ம் ஆண்டு நிறுவியது. இதன்மூலமாகத்தான், இயற்கை அல்லது செயற்கை பேரழிவுகள் சம்பந்தமான முடிவுகளும் திட்டங்களும் வரையப்படுகின்றன.

8. சென்னையில் நடந்த வெள்ளப் பெருக்கம், கேரளாவில் தற்போது நிகழ்ந்த வெள்ளப் பாதிப்பு ஆகியவை இந்தியாவில் காலநிலை மாற்றத்திற்கான மிக முக்கியமான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றன.

9. 2016ஆம் ஆண்டு, Sendai Seven எனும் இயற்கைப் பேரழிவுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், ஏழாண்டுகளுக்குத் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு குறிக்கோளை எடுத்து அதை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்கும்.

10. இந்த ஆண்டிற்கான கூறிக்கோள், Target C; உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) தொடர்புள்ள பேரழிவு பொருளாதார இழப்புக்களை 2030குள் குறைக்க வேண்டும். (Reducing Disaster Economic Losses in relation to global GDP by 2030).

- ஆஸிஃபா

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon