மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

போலிச்சான்றிதழ்: 2 பெண்கள் கைது!

போலிச்சான்றிதழ்: 2 பெண்கள் கைது!

போலி அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வந்த 2 பெண்களைக் கைது செய்துள்ளனர் திருப்பூர் போலீசார். இதில் முக்கியக் குற்றவாளியாகச் செயல்பட்டு வந்த வழக்கறிஞர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதாகர், அழகுநிலையம்நடத்தி வரும் மகேஸ்வரி மற்றும் திருப்பூர் தாசில்தார் அலுவலகத்தின் வெளியே மனுக்கள் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்த மாசான வடிவு ஆகிய 3 பேர் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு எழுந்தது.

இந்தக் கும்பல் போலி ஆதார் அட்டைகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளனர். பேரூராட்சி செயல் அலுவலர், நில அளவை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு அதிகாரி என பல அரசுத் துறைகளின் போலி சீல்களையும் இந்தக் கும்பல் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளது. ஒரு சான்றிதழுக்கு 2,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 8,000 ரூபாய் வரை இந்தக் கும்பல் வாங்கியுள்ளது. இது போன்ற பல புகார்கள் வருவாய்த் துறையினரிடம் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து, போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்கும் கும்பலைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் களத்தில்இறங்கினர். முதற்கட்ட விசாரணையில், திருப்பூர் பாரதிநகரில் செயல்பட்டு வரும் ஒரு அழகுநிலையத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதாகத் தகவல் வெளியானது. அதன்படி, அழகு நிலையத்தில் இருந்த மாசான வடிவை அணுகி போலிச் சான்றிதழை வாங்க மணி என்பவரை வருவாய்த் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். தனக்கு நீதிமன்ற ஜாமீன் பெறுவதற்கான சான்றிதழ் வேண்டும் என்று மாசான வடிவிடம் கேட்டுள்ளார் மணி. அதற்கு 8,000 ரூபாய் தந்தால் ஜாமீனுக்கான சான்றிதழ் தருவதாக உறுதியளித்தார் மாசான வடிவு. இதன்பின்னர், போலி ஜாமீன் சான்றிதழ் ஒன்றை அதிகாரிகளின் கையெழுத்துடன் தயாரித்துக் கொடுத்தபோது, திருப்பூர் போலீசார் மாசானவடிவைக் கைதுசெய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதாகர் என்பவர் இந்த மோசடிக்கும்பலில் முக்கியமான நபர் என்று தெரிய வந்ததாகத் தகவல் வெளியானது.

மகேஸ்வரி நடத்திவந்த அழகு நிலையம் தான் இவர்களின் அலுவலகமாகச் செயல்பட்டு வந்ததாகவும், போலிச் சான்றிதழ்களை தயாரிக்கும் பணியில் வழக்கறிஞர் சுதாகரும், போலிச் சான்றிதழ்களைத் தேவைப்படுவோரிடம் கொடுத்துப் பணம் வாங்கும் பணியில் மாசானவடிவும் செய்து வந்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

இந்த கும்பலில் மாசான வடிவு, மகேஸ்வரி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான வழக்கறிஞர் சுதாகரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால், இதன் பின்னணியில் உள்ளவர்களைப் பிடிக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon