மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை!

வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை!

இந்தியாவின் உற்பத்தித் துறை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வலுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு சார்பாக இந்திய உற்பத்தித் துறையின் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.2.8 லட்சம் கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட மிகப் பெரிய மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்த சுமார் 300 உற்பத்தியாளர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 61 சதவிகிதத்தினர் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் தங்களது உற்பத்தி சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்தம் 49 சதவிகிதத்தினர் இதற்கு ஆதரவாகப் பதிலளித்திருந்தனர்.

உள்நாட்டு உற்பத்தி சிறப்பாக இருக்கும் நிலையில் ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக ஏற்றுமதியில் மிகப் பெரிய தாக்கம் எதுவும் இருக்காது எனவும் கூறப்படுகிறது. 83 சதவிகித உற்பத்தியாளர்கள் ரூபாய் மதிப்பு சரிவால் பாதிப்பு இருக்காது என்று இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். உற்பத்தியைப் பொறுத்தவரையில், சிமெண்ட், செராமிக்ஸ், ஆட்டோமோட்டிவ், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜவுளிப் பொருட்கள், ஜவுளி இயந்திரங்கள், உலோகங்கள், மின்னணு சாதனங்கள், ரசாயனம் ஆகிய துறைகளில் மிதமான வளர்ச்சி இருக்கும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon